மின்சாரம் தாக்கி பெண் பலி
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, கம்மநல்லுார் பஞ்சாயத்து தீர்த்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 53. இவரது வீட்டுக்கு அருகில் ஆடுகளை கட்டி வைக்கும் பட்டி உள்ளது. இதன் அருகிலேயே மொபைல்போன் டவரும் அமைந்துள்ளது. கேபிள் கம்பி அருகில், ஆடுகளை கட்டும் இடங்களை சரஸ்வதி சுத்தம் செய்தபோது, எதிர்பாராமல் இரும்பு கம்பி மீது உரசியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார்.லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.