பைக் மீது லாரி மோதி பெண் பலி; மூவர் காயம்
பைக் மீது லாரி மோதிபெண் பலி; மூவர் காயம்குளித்தலை, அக். 9-தோகைமலை அருகே, இரு பைக்கு கள் மோதிய விபத்தில், கணவன் கண் எதிரே மனைவி பலியானார். மூவர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த, மாவில்லிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி லோகநாதன், 39. இவர் தனக்கு சொந்தமான, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் நேற்று முன்தினம் மதியம், சொந்த வேலையாக தோகைமலை சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பைக்கில் மனைவி மலர்கொடி, 37, பின்னல் அமர்ந்து வந்தார். அப்போது, எதிரே கொசூர் பஞ்., குப்பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், 25, என்பவர் ஓட்டி வந்த பைக் பின்னால், மாறிப்பாறைப்பட்டியை சேர்ந்த கனகராஜ் அமர்ந்து வந்தார்.தோகைமலை, குளித்தலை நெடுஞ்சாலையில் எலும்பு முறிவு வைத்தியசாலை எதிரே, இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதில் மலர்கொடி மீது அவ்வழியே வந்த லாரி ஏறி, சம்பவ இடத்திலேயே கணவன் கண் எதிரில் பலியானார். இந்த விபத்தில் லோகநாதன், கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து லோகநாதன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை கருங்குளத்தை சேர்ந்த ஆல்பர்ட் சபரிராஜ், 39, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.