உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஷாக் அடித்து பெண் உயிரிழப்பு

ஷாக் அடித்து பெண் உயிரிழப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த மாயனுார் பஞ்., காட்டூர் கிராமத்தை சேர்ந்-தவர் ராஜா, 55; டைலர். இவரது மனைவி சரோஜா, 50. இவர், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில், ஸ்விட்ச் பாக்ஸை பிரித்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர். சரோஜாவை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்-டர்கள், சரோஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ