உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு

கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு

கரூர், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் குமாரி, வழக்குகள் விசாரணை குறித்து ஆய்வு செய்தார்.தேசிய மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கரூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அவரை, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட, போலீசார் வரவேற்றனர். பிறகு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள், தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள், ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் பெண்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், புகார் கொடுக்க வரும் பெண்களிடம், பெண் போலீசார் கனிவுடன் பேசி, பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என, தேசிய மகளிர் ஆணைய தலைவர் குமாரி அறிவுரை வழங்கினார். அப்போது, போலீஸ் எஸ்.ஐ., சித்ரா தேவி உள்ளிட்ட, மகளிர் போலீசார் உடனிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !