பெண்கள் பாதுகாப்பு பாலின நீதி கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், கரூர் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு பாலின நீதி கூட்டியக்கம் சார்பில், தலைவர் கிறிஸ்டினா சாமி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், சட்ட விரோதம் மற்றும் விதிமுறைகளை மீறி, மதுபானங்கள் விற்பனையை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் மீதான வழக்குகளை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்க வேண்டும், ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு குற்றம் இழைத்தவர்களின் வழக்குகளை, ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.