உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

குளித்தலை: திருச்சி மாவட்டம், மணச்சநல்லுார் கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் உரம் மூட்டை துாக்கும் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள், நேற்று காலை திருச்சி கூட்ஸ்செட்டில் இருந்து, உர மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, தண்ணீர்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மூட்டைகளை இறக்கி வைத்தனர். பின்னர், குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளியில் தென்கரை பாசன வாய்க்காலில், மணச்சநல்லுாரை சேர்ந்த தொழிலாளி முருகேசன், 50, குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூழ்கியவரை மீட்டனர். பின், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், தண்ணீரில் மூழ்கி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. குளித்தலை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி