நிலுவை தொகை கேட்டு மாஜி எம்.பி., வீட்டின் முன் குவிந்த தொழிலாளர்கள்
கரூர்: கரூரில், பி.எப்., நிலுவை தொகை கேட்டு, முன்னாள் தி.மு.க., எம்.பி., வீட்டின் முன், தொழிலாளர்கள் குவிந்தனர்.கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 85; தொழிலதிபர். முன்னாள் தி.மு.க., எம்.பி., இவர், மாயனுாரில் பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்ட தொழி-லாளர்கள், பி.எப்., நிலுவை தொகையை கேட்டு, கரூரில் உள்ள முன்னாள் எம்.பி., பழனிசாமி வீட்டின் முன் குவிந்தனர். அப்போது, பழனிசாமி வீட்டில் இல்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள், பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்காக கோவைக்கு சென்று இருப்பதாக தெரிவித்தனர்.இதையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்-பட்டது.