மரக்கன்றுகளை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம், வல்லம் சாலையோர இடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை, பாதுகாக்கும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து சார்பில், வல்லம், கொம்பாடிப்பட்டி ஆகிய சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கால்நடைகளில் இருந்து மரக்கன்றுகளை, பாதுகாப்பு செய்யும் வகையில், நேற்று காலை சாலையோரம் வளர்ந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் மரக்கன்றுகளுக்கு தடுப்பு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.