உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் செடிகளில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள்

எள் செடிகளில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் செடிகளின் களைகளை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி, மைலம்பட்டி, குளத்துார், கணக்கப்பிள்ளையூர், மலையாண்டிப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, தேசியமங்களம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்துள்ளனர். மானாவாரி நிலங்களில், தற்போது செடிகள் வளர்ந்து, 20 நாட்களுக்கு மேலாகிறது. எள் செடிகள் நடுவில் களைகள் வளர்ந்து வருவதால், கூலி தொழிலாளர்களை கொண்டு அகற்றும் பணி நடந்து வருகிறது. களைகள் அகற்றுவதால் செடிகள் வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். தற்போது இந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !