சாலையை அகலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள்
அரவக்குறிச்சி, கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட, மாநில நெடுஞ்சாலையான தாடிக்கொம்பில் இருந்து பள்ளப்பட்டி வழியாக, அரவக்குறிச்சி வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி நேரில் ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் வினோத்குமார் உடன் இருந்தார்.