அரசு மருத்துவமனையில் உலக மனநல தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
குளித்தலை, குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட மனநல திட்டம் சார்பாக, உலக மனநல தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமை வகித்து பேசினார்.மாவட்ட மனநல திட்டத்தின் மருத்துவர்கள் பாரதி கார்த்திகா, டாக்டர் லாவண்யா, மனநலம் பாதிப்புகளை தவிர்த்தல் மற்றும் மனநலம் கையாளும் விதம் குறித்து பேசினர். பின்னர், மனநலம் காப்பது பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. மனநல ஆலோசகர்கள் மகேஸ்வரி, மனோஜ், மருத்துவர்கள் தினேஷ், கன்னியாகுமரி, நித்தியா, சண்முகபிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.