உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக மூத்த குடிமக்கள் தின கருத்தரங்கு, விழிப்புணர்வு பேரணி

உலக மூத்த குடிமக்கள் தின கருத்தரங்கு, விழிப்புணர்வு பேரணி

குளித்தலை, தோகைமலையில் நடந்த, உலக மூத்த குடிமக்கள் தின கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணியில் திரளானோர் கலந்துகொண்டனர்.குளித்தலை அடுத்த தோகைமலையில், 'வோசார்டு மற்றும் ஓ.டி.ஏ.,' சார்பில், உலக மூத்த குடிமக்கள் தின கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி, நேற்று முன்தினம் நடந்தது. 'வோசார்டு' நிறுவனத்தின் அருட்தந்தை ஜோஸ் ஆண்டணி தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தோகைமலை தமிழ்ச்சங்க நிறுவனர் காந்திராஜன், அரசு மருத்துவ அலுவலர் குமரேசன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 1990ல் உலக ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்புபடி, ஆக., 21ல் உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வயதானவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன் காத்தல், முதியவர்களுக்கான ஆதரவு, மரியாதை, பாராட்டு, அவர்களின் சாதனையை அங்கீகரிப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும் என, தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தோகைமலை அரசு மருத்துவமனை அருகே விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.வோசார்டு மற்றும் ஓ.டி.ஏ., பணியாளர்கள் உள்பட தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 300க்கும் அதிகமான மூத்த குடிமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ