மேலும் செய்திகள்
மாவட்டத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்
22-Jun-2025
கரூர், கரூர் அரசு கலைக்கல்லுாரியில், உலக யோகா தினவிழா நேற்று நடந்தது.அதில், கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், பேராசிரியர்கள், தேசிய பசுமை படை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். விழாவில், கல்லுாரி விலங்கியல் துறைத்தலைவர் கார்த்திகேயன், தேசிய பசுமை படை அலுவலர் விநாயகம், தமிழ் துறை பேராசிரியர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.* பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் யோகா பயிற்சி செய்தனர். 2015 முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் யோகா பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமையாசிரியர்கள் தாஜூதீன், நாகூர் மீரான் தொடங்கி வைத்தனர்.யோகா பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர் ஜகாங்கிர் பயிற்றுவித்தார். ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் முகமது இஸ்மாயில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஹாரிஸ் அலி ஆகியோர்செய்திருந்தனர்.
22-Jun-2025