திருச்சி பாரதிதாசன் பல்கலையில் முனைவர் படிப்புக்கான, நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் முனைவர் படிப்புக்கான, நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை பதிவாளர் காளிதாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி பாரதிதாசன் பல்கலையில், முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பில் (பி.ஹெச்.டி.,) சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, ஆண்டுதோறும் பிப்., மற்றும் ஆக., மாதம் என, இரண்டு முறை தகுதி நுழைவு தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு ஆக., மாத தகுதி நுழைவு தேர்வு வரும், ஆக., 24ல் நடை பெற உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கான தகுதி, பாடத்திட்டம், தேர்வு, வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விபரங்கள் பல்கலை இணையதளமான www.bdu.ac.in-ல் உள்ளது. பாரதிதாசன் பல்கலையுடன், மாணவர்கள் தங்களது கல்வி பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.