உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி போலீசார், சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரிபள்ளி அருகே உள்ள முள் காட்டில், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத் கண்ணன், 30, என்பவர் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக அவரை கைது செய்த அரவக்குறிச்சி போலீசார், அவரிடமிருந்து, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி