மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
04-Apr-2025
கரூர்:கரூர் அருகே, புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி சென்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீசார் நேற்று புலியூர்-உப்பிடமங்கலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற மாருதி இகோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தின், 279 மதுபாட்டில்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதுபான பாட்டில்களின் மதிப்பு, ஒரு லட்சத்து, 50 ஆயிரம்ரூபாய்.இதையடுத்து, காரை ஓட்டி சென்ற, கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜ், 29; என்பவரை போலீசார் கைது செய்தனர். பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில், சட்ட விரோத விற்பனைக்கு, மதுபாட்டில்களை கார்த்திக் ராஜ் கடத்தியது தெரிய வந்தது.இதனால், மதுபாட்டில்கள், கார், 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
04-Apr-2025