உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கரூர், கரூர் அருகே, ரகசிய காதலியை கத்தியால் குத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43; இவர், அதே பகுதியை சேர்ந்த, 46 வயது பெண்ணுடன் கடந்த, எட்டு ஆண்டுகளாக ரகசியமாக பழகி வந்தார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இரவு கோவிந்தராஜூக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், பெண்ணின் தோள் பட்டையில் கத்தியால் குத்தினார். அதில், படுகாயமடைந்த பெண், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண் கொடுத்த புகார்படி, கோவிந்தராஜை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை