உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

கரூர், க.பரமத்தி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஈசநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 36, திருமணமாகாதவர். இவர் கடந்த ஏப்., 8 மாலை அதே பகுதியை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், 37, மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் ரூரல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ