உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தலை துண்டித்து வாலிபர் கொலை

தலை துண்டித்து வாலிபர் கொலை

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், கட்டளை மேட்டு வாய்க்கால் மேற்கு பகுதி நடு கரையோரம், நேற்று மதியம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த இனுங்கனுார் கிராமத்தை சார்ந்த காளிதாஸ், 32, என்பதும், அவரது பெற்றோர் கர்நாடகாவில் உள்ள மகள் வீட்டில் வசிப்பதும் தெரியவந்துள்ளது. காளிதாஸ் தன் பெயரை, கையில் பச்சை குத்தியுள்ளார். இதை வைத்து போலீசார் கொலையான நபரை கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது கரூர், அரவக்குறிச்சி, அரியலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ