உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கரூர்:க.பரமத்தி அருகே, பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் பிரகாஷ், 30; இவர் கடந்த, 4ல் முத்து சோழிப்பாளையத்தில் உள்ள, பெரியசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள, பனை மரத்தில் நுங்கு பறிக்க ஏறியுள்ளார். அப்போது, திடீரென பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த பிரகாஷ், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், பிரகாஷ் உயிரிழந்தார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ