உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு

கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்-கப்பட்டார்.பள்ளப்பட்டி அருகே சவந்திராபுரத்தை அடுத்த வெரிச்சனம்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்புகுட்டி, 32. இவர், தனது தோட்-டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை மேய்ச்ச-லுக்கு சென்றிருந்த ஆடுகளை, மீண்டும் பிடிக்க சென்றபோது தவறி தோட்டத்தில் இருந்த கிணற்றில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி அப்பு-குட்டியை பத்திரமாக மீட்டனர். விரைந்து செயல்பட்ட தீய-ணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ