உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, பெயின்டிங் வேலை பார்த்தபோது, மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயமடைந்தார்.அரவக்குறிச்சி அருகே புஞ்சைக்காளிகுறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 45. இவர் பெயின்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், தங்கராஜ் என்பவரது வீட்டின் முன் பகுதியில், பெயின்டிங் வேலையில் இவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே சென்ற மின் கம்பியை தொட்டதால், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். இதில் கீழே விழுந்த அவருக்கு தலை, கால், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ