கருவிலுள்ள குழந்தை பாலினம் கூறும்சேலத்தில் சிக்கிய ஸ்கேன் சென்டர்கர்ப்பிணிகளிடம் ரூ.15,000 வசூல்
கருவிலுள்ள குழந்தை பாலினம் கூறும்சேலத்தில் சிக்கிய ஸ்கேன் சென்டர்கர்ப்பிணிகளிடம் ரூ.15,000 வசூல்கிருஷ்ணகிரி:கருவிலுள்ள குழந்தை பாலினத்தை கண்டறிந்து கூறிய, சேலம், வீராணத்திலுள்ள ஸ்கேன் சென்டர் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை பாலினத்தை, திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள சில கிளினிக்குகளில் கூறுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்கள் ராஜேஷ், குமார், விமல் மற்றும் குழுவினர், திருப்பத்துார் மாவட்டம் சென்றனர்.அவர்கள், திருப்பத்துார் மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமாருடன் இணைந்து ஆய்வு செய்தனர். கர்ப்பிணிகளையும் உடன் அழைத்து சென்றிருந்தனர். அங்கு பைக்கில் வந்த ஏஜென்ட் ஒருவர், ஆதார் அட்டை இல்லாமல் ஸ்கேன் செய்ய முடியாது எனக்கூறி, சேலம் செல்ல கூறினார். நேற்று முன்தினம் மாலை, சேலம் சென்ற குழுவினரை சந்தித்த இடைத்தரகர்கள், சேலம் அருகே, வீராணம் பகுதிக்கு அழைத்து சென்றனர். வீராணம் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் அருகில், பசுபதி ஸ்கேன் மையம் என்ற கிளினிக்கில் வைத்து, கருவிலுள்ள குழந்தைகள் பாலினம் கண்டறியும் பணிகள் நடந்து வந்தது தெரிந்தது. ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய இருவரும், இந்த கிளினிக்கை நடத்தி வந்துள்ளனர். ஆய்வில், 3 பெண்களுக்கு கருவிலுள்ள குழந்தை பாலின விபரம் கூறி, தலா, 15,000 ரூபாய் பெற்றது உறுதி படுத்தப்பட்டது.வாழப்பாடி முதன்மை மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள், ஸ்கேன் மெஷினை பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 5 இடைத்தரகர்கள் மீது வீராணம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், ''இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.