உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இட ஒதுக்கீட்டை அமல் படுத்தக்கோரி பா.ம.க.,வினர் தொடர் முழக்க போராட்டம்

இட ஒதுக்கீட்டை அமல் படுத்தக்கோரி பா.ம.க.,வினர் தொடர் முழக்க போராட்டம்

கிருஷ்ணகிரி, டிச. 25-கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மத்திய மாவட்ட, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, நேற்று காலை தொடர் முழக்க போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மின்னல் சிவா, வழக்கறிஞர் இளங்கோ, மாநில மகளிர் அணி தமிழ்செல்வி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதுவரை, பா.ம.க., மற்றும் வன்னியர்களின் போராட்டம் தொடரும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.* மேற்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத, தி.மு.க., அரசை கண்டித்து, ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் எதிரே, தேன்கனிக்கோட்டை சாலையில், நேற்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் முனிராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். * போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் எதிரில், கிழக்கு மாவட்ட, பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 1,000 நாட்கள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்காத, தி.மு.க., அரசை கண்டித்து, தொடர் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., தலைவர் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். * கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே தேன்கனிக்கோட்டை சாலையில், நேற்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் முனிராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை