உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையோரம் பாதுகாப்பற்ற கோவில் குளம் தடுப்புச் சுவர் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

சாலையோரம் பாதுகாப்பற்ற கோவில் குளம் தடுப்புச் சுவர் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

சாலையோரம் பாதுகாப்பற்ற கோவில் குளம் தடுப்புச் சுவர் அமைக்க பக்தர்கள் கோரிக்கைகிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி அருகில் உள்ள கணவாய்ப்பட்டி கிராமத்தில் புகழ் பெற்ற வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் குளம் அருகில் மொட்டை அடித்து, அருகில் சாலையோரம் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர்.குளம் சுற்றிலும் தடுப்புச் சுவர் இன்றி அபாய நிலையில் உள்ளது. குளத்தின் மேல் பகுதியில் வளைவாக உள்ள கிராம சாலையில் இருந்து வரும் வாகனங்கள் குளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கோவில் திருவிழா நாட்களில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வதால், குளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் குளத்தை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை