ஆக்கிரமிப்புகள், சாக்கடை கால்வாய் அகற்றம்போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் அவதி
ஆக்கிரமிப்புகள், சாக்கடை கால்வாய் அகற்றம்போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் அவதிகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி, ஐந்துரோடு ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்தார். இதையடுத்து, 5 ரோடு பகுதியிலுள்ள சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை, பழைய சப் ஜெயில் சாலை, காந்தி சாலை என, 5 பிரதான சாலைகளிலும், ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.கடந்த, 31ல், கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் இணைந்து இப்பகுதியிலுள்ள நடைபாதை கடைகள், ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிகவளாக படிக்கட்டுகள், சிலாப்புகள், சாக்கடை கால்வாய்களில் மூடப்பட்ட கற்கள் உள்ளிட்டவைகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். ஆனால், சாலைகளை சுத்தம் செய்யவில்லை. இதனால், பழைய சப்ஜெயில் சாலை, சேலம் சாலையில் உடைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு சிலாப்புகள் கிடக்கின்றன.சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்பட்ட பிறகே, இடிக்கப்பட்ட கற்கள் சீரமைக்கும் பணி துவங்கும் என, நகராட்சி அலுவலர்கள் கூறிய நிலையில், அப்பணியும் நடக்கவில்லை. இதனால் சாலைகளில் வாகனங்கள் சென்று வர சிரமமாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மூடியிருந்த கற்கள் உடைக்கப்பட்ட நிலையில், சாக்கடை கால்வாய்களை தாண்டி சென்று கடைகள், வணிக வளாகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.