மேலும் செய்திகள்
ஓசூர் புதிய நகர வளர்ச்சி திட்டம் அரசு ஒப்புதல்
24-Jan-2025
ஓசூர் மாநகராட்சியுடன் நல்லுார் பஞ்.,இணைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஓசூர்,:நல்லுார், பெரியப்பள்ளி பஞ்சாயத்துக்களை, ஓசூர் மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட கோரி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம ரெட்டி தலைமை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி பேசியதாவது: விவசாய நிலங்கள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியை மாநகராட்சியோடு இணைத்தால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பர். நிலவரி, தண்ணீர் வரி, பன்மடங்கு உயரும். எனவே அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி, தொரப்பள்ளி, கெலவரப்பள்ளி சென்னசந்திரம் பஞ்.,களில் சில கிராமங்களை மாநகராட்சியோடு சேர்க்காமல் தவிர்ப்பதை போல, நல்லுார், பெரியப்பள்ளி பஞ்., பகுதிகளையும் மாநகராட்சியில் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்க மேற்கு மாவட்ட துணை தலைவர் நரசிம்மமூர்த்தி. செயலாளர் சந்திரசேகர். மகளிர் அணி மாவட்ட தலைவி கிரிஜாம்மா மற்றும் ஓசூர் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Jan-2025