மேலும் செய்திகள்
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு
13-Feb-2025
பிரத்தியங்கிரா தேவி கோவிலில்தை மாத பவுர்ணமி வழிபாடுஓசூர், :ஓசூர், ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள், ராகு, கேது ப்ரீத்திக்காக மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுபவர். தை மாதத்தில் வரும் பவுர்ணமி மற்றும் தைப்பூசம், பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு உகந்த நாள் என்பதால், இங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த தை பவுர்ணமி வழிபாட்டில், கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டது. பிரத்தியங்கிரா அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
13-Feb-2025