உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தஊத்தங்கரை கிளை சிறை

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தஊத்தங்கரை கிளை சிறை

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தஊத்தங்கரை கிளை சிறைஊத்தங்கரை:ஊத்தங்கரை கிளைச்சிறை கடந்த, 2019ல் கொரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு அங்கு பராமரிப்பு பணிகள் செய்து, நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீசார் அழைத்துச் சென்று வந்தனர். இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இக்கிளை சிறையில், ஊத்தங்கரை சரக போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்துார் மற்றும் போச்சம்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்படுவதால் போலீசுக்கு நேரம் மிச்சமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ