உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு

பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு

பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையவீட்டு வசதிவாரிய குடியிருப்புகளில் உள்வாடகை விடுவதாக எழுந்த புகாரை யடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் உள்வாடகையில் தங்கியிருப்பது தெரிந்தது.கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலை, சென்ட்ரல் தியேட்டர் எதிரில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, அரசு அலுவலர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிவோரில் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒதுக்கப்பட்டோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இங்கு பலர், உள்வாடகைக்கு வீட்டை விட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தின் ஓசூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அங்குள்ள வீடுகளில் ஆய்வு செய்தனர்.பின்னர் ஓசூர் வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:இங்குள்ள, 192 குடியிருப்புகளில், 150 வீடுகளில் குடியிருக்கின்றனர். 42 வீடுகள் காலியாக உள்ளன. வீடுகள் தோறும் ஆவணங்கள்படி ஒதுக்கப்பட்டவர்கள் குடியிருக்கிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் சாலையோர கடைகள் நடத்துபவர்களுக்கும், வெளி நபர்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருப்பதும் தெரிந்தது. இது குறித்து வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை