உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா

அறிஞர் அண்ணா கல்லுாரியில் மகளிர் தின விழா கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி அகத்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவியர், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். உயர்கல்வி, பொருளாதாரம், மருத்துவம், விண்வெளி, அரசியல், சமூக சேவை என்னும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும்,'' என்றார். மகளிர் தினத்தையொட்டி, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், மெஹந்தி, கோலம், இசை நாற்காலி என பல்வேறு போட்டிகள், தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கல்லுாரி முதல்வர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாவட்ட யோகா பயிற்சியாளர் உமா மகேஸ்வரி, தேன்தமிழ் பரத நாட்டியாலயா நிறுவனத்தை சேர்ந்த மதுமொழி ஆனந்த் ஆகியோர் பேசினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உயிர் தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் கிருத்திகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை