மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் போர்வெல் பைப்புகள் எரிந்து நாசம்
27-Feb-2025
வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கரியசந்திரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்ததால், ரஞ்சித்குமார் அருகே குடிசையில் தங்கியிருந்தார். நேற்று மதியம் சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில், டூவீலர் வாங்க வைத்திருந்த, 35,000 ரூபாய் மற்றும் வீட்டு எலக்ட்ரிக்கல் வேலைக்கு வைத்திருந்த ஒயர்கள் உட்பட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Feb-2025