உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மளிகை கடையை அடித்துநொறுக்கிய இருவர் கைது

மளிகை கடையை அடித்துநொறுக்கிய இருவர் கைது

மளிகை கடையை அடித்துநொறுக்கிய இருவர் கைதுஓசூர், : ஓசூர் அடுத்த, பாகலுார் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் வேணுகோபால், 43, மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை நாமதாசப்பா தெரு அருகில் பைக்கில் சென்றார். அப்போது, பாகலுார் முன்னாள் பஞ்., தலைவர் ஜெயராமனின் வீட்டு நாய், பைக்கின் குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து, வேணுகோபால் காயமடைந்தார். அங்கு வந்த ஜெயராமன் மனைவி ஆனந்தம்மாவுடன் வேணுகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்த ஜெயராமன், 57, கனகண்டப்பள்ளியை சேர்ந்த நவீன்குமார், 27 ஆகிய இருவரும், வேணுகோபாலின் மளிகை கடைக்கு சென்று பொருட்களை அடித்து உடைத்தனர். வேணுகோபால் புகார் படி, இருவரையும் பாகலுார் போலீசார் கைது செய்தனர். அதேபோல ஜெயராமனின் மனைவி ஆனந்தம்மா புகார் படி, வேணுகோபால் மீதும், போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !