மேலும் செய்திகள்
எரிந்தது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
22-Jan-2025
காய்கறி வியாபாரியிடம் எலக்ட்ரிக் மொபட் பறிப்புகிருஷ்ணகிரி, : ஓசூர், ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் பூமணி, 40, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த, 21 இரவு, 10:00 மணியளவில் ஆம்பயர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தேர்பேட்டை அருகே சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த டிரைவர் சிவக்குமார், 32 என்பவரை இருவர் வெட்டி கொன்றனர். கொலையில் ஈடுபட்டவர்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்த பூமணியிடம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது ஸ்கூட்டரை பறித்து சென்றனர். இது குறித்து, பூமணி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
22-Jan-2025