மேலும் செய்திகள்
கணவன், மகன் மாயம்: மனைவி போலீசில் புகார்
10-Jan-2025
மனைவி, மகனை தற்கொலைக்குதுாண்டியவர் உட்பட இருவர் கைதுஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கி மீனன்தொட்டியை சேர்ந்தவர் பசவராஜ், 45, கட்டட மேஸ்திரி. இவர் மனைவி ராணியம்மா, 41. இவர்களுக்கு, வெங்கட்ராஜ், 19, என்ற மகன் மற்றும் 2 மகள்கள். வெங்கட்ராஜ் தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படித்து வந்தார். பசவராஜிற்கும், அப்பகுதியை சேர்ந்த ராதாம்மா, 39 என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கேட்ட மனைவி மற்றும் மகனை பசவராஜ் தாக்கியுள்ளார். மனமுடைந்த இருவரும் கடந்த, 21ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உறவினர்கள் புகார் படி பேரிகை போலீசார், பசவராஜ், ராதம்மா இருவரையும் கைது செய்தனர்.
10-Jan-2025