உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயான கொள்ளை திருவிழாஅம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயான கொள்ளை திருவிழாஅம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயான கொள்ளை திருவிழாஅம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மஹா சிவராத்திரியும், நேற்று மயான கொள்ளை திருவிழாவும் நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, முகவெட்டை, மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி, அம்மன் மற்றும் ஈசன் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதியம், அலங்கரிக்கப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து, அம்மன் மயான கொள்ளைக்கு புறப்பட்டு சென்றார். கிரேனில் பறந்து சென்று பக்தர், அம்மனுக்கு மாலை அணிவித்தார். வழியில் பொதுமக்கள், உப்பு மற்றும் மிளகை தேர் மீது துாவி, வேண்டிக் கொண்டனர். விழாவில், 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழியில் பக்தர்களுக்கு நீர்மோர், தண்ணீர், அன்னதானத்தை பொதுமக்கள் வழங்கினர். திருவிழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.* ஊத்தங்கரையில், அங்காள பரமேஸ்வரி, பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அருள்பாலித்தார். அங்காள பரமேஸ்வரி, பெரியாண்டிச்சி, பத்ரகாளியம்மன் போன்ற அம்மன் வேடமிட்டு, ஊத்தங்கரை முனியப்பன் கோவில் பகுதியில் இருந்து மயானம் வரை மேள தாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சாட்டை, முறத்தால் அடித்து வினோத வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ