மேலும் செய்திகள்
மல்பெரி, வெண்பட்டு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
16-Feb-2025
பட்டு புழு வளர்ப்பு முறை பயிற்சிகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட் டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில், அட்மா திட்டத்தில், மணவாரணப்பள்ளி கிராமத்தில், மல்பெரியில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பட்டு புழுக்கள் வளர்ப்பு முறை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் சிவநதி பயிற்சியை துவக்கி வைத்து, மல்பெரியில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அத்திமுகம் அதியமான் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ராகுல், இயற்கை முறையில் மல்பெரி சாகுபடி முறை தொழில்நுட்பம், மல்பெரி நாற்றங்கால் உற்பத்தி தொழில்நுட்பம், பட்டுப்புழு வளர்ப்பு முறை, மல்பெரியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, கோடை உழவு, விதை நேர்த்தி, அசோலா பற்றிய பயன்கள், மண்புழு உரம், பஞ்சகாவ்யா தயாரித்தல், பூச்சி விரட்டி, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கன ஜீவாமிர்தம், பசுந்தாள் உரம் தயாரித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு முறை குறித்து விளக்கினார்.விவசாயிகளுக்கு, தொழில்நுட்ப விபரம் குறித்த குறிப்பேடு மற்றும் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கவிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
16-Feb-2025