சேதமான தொலைக்காட்சி அறைஇடியும் முன் அகற்ற எதிர்பார்ப்பு
சேதமான தொலைக்காட்சி அறைஇடியும் முன் அகற்ற எதிர்பார்ப்புகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவிநாயனப்பள்ளி பஞ்,.ல் கடந்த 1988ல் ஆதிதிராவிடர் குடியிருப்பு இல்லங்கள் திறப்பு விழா நடந்தது. 50 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பு பகுதியில் தொலைக்காட்சி அறையும் திறக்கப்பட்டது. இந்த தொலைக்காட்சி அறை தற்போது சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன் அருகிலேயே குழந்தைகள் விளையாடி வருகின்றனர். பயன்பாடில்லாமல் சேதமடைந்துள்ள இந்த அறை, திடீரென இடிந்து விழுந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்பதால், அதை உடனடியாக இடித்து அகற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த, 36 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட தொலைக்காட்சி அறை, தற்போது பயன்பாடில்லாமல் சேதமடைந்து கிடக்கிறது. இதை இடித்து அகற்றுமாறு, கலெக்டர், பி.டி.ஓ., அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பயன்பாடில்லாத இக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.