உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தரமற்ற முறையில் தொகுப்பு வீடுஇடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்

தரமற்ற முறையில் தொகுப்பு வீடுஇடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்

தரமற்ற முறையில் தொகுப்பு வீடுஇடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே, இருளர் காலனியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் பக்குவாட்டு சுவர் இடிந்தது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்தார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளைபட்டி ஊராட்சி, இருளர் காலனியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வீடுகள் இல்லாமல் பலர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.இதையடுத்து அரசு பி.எம்., ஜன்மன் திட்டத்தில், 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில் இப்பகுதி இருளர் இன மக்களுக்கு கடந்த ஆண்டு, 16 வீடுகள் வழங்கியது. இந்த வீடுகளை கட்ட போதுமான நிதி வசதி இல்லாததால், அதிகாரிகள் உதவியுடன், சில ஒப்பந்ததாரர்கள் வீடுகளை கட்டி கொடுக்க முன்வந்தனர்..இவ்வவாறு, 16 வீடுகள் இருளப்பட்டி இருளர் காலனி உள்ளிட்ட பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியை சேர்ந்த குமாரி என்பவரின் வீட்டின் கட்டுமான பணி நடந்தது. அப்போது வீட்டின் பக்கவாட்டில் கட்டப்பட்ட ஜன்னல் கூரை இடிந்து விழுந்தது. இது குறித்து புகார் படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது இருளர் மக்கள் அவரிடம் சராசரி புகார் தெரிவித்தனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளவரசி என்பவர் கூறியதாவது: அரசு வழங்கிய வீடுகள் கட்ட முடியாத ஏழ்மை நிலையில் உள்ளோம். இதை பயன்படுத்தி அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் கட்டி தருவதாக கூறி, தரமற்ற முறையில் கட்டித் தருகின்றனர். அரசு அனுமதி அளித்த அளவை விட குறைவாகவும், கட்டடங்கள் தரமற்ற முறையிலும் கட்டப்படுவதால் இடிந்து விழுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி