மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்கள்வாங்குவோர், விற்போருக்கான கண்காட்சி
மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்கள்வாங்குவோர், விற்போருக்கான கண்காட்சிகிருஷ்ணகிரி:தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் செயல்படும், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விளப்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கு, வாங்கு வோர் விற்போர் மெகா சந்திப்பு மேளா நடந்தது.இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் துவக்கி வைத்து பேசியதாவது:மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உற்பத்தியாளர்களுடன், விற்பனையாளர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு சந்தைப்படுத்தும் வகையில், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் உதவும். பிற மாநிலங்களில் நடத்தப்படும் சாரஸ் கண்காட்சிகளில், மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது. சாரஸ் கண்காட்சிகள் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவதால், அதில் பங்கேற்பதன் மூலம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் தயாரிப்புகளை தேசிய அளவில் விற்பனை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மகளிர் தொழில் முனைவோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.