உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தைகண்டறிவது தெரிந்தால் கடும் நடவடிக்கை

கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தைகண்டறிவது தெரிந்தால் கடும் நடவடிக்கை

'கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தைகண்டறிவது தெரிந்தால் கடும் நடவடிக்கை'ஓசூர்:''கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் எச்சரித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளின் அவசியத்தை உணர்த்தும் வகையில், பெண்மையை போற்றும் பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை சட்ட விரோதமாக யாராவது கூறுகிறார்களா என, மாவட்ட நிர்வாகம் சார்பில், சுகாதார துறை அலுவலர்களால் சோதனை நடத்தப்பட்டது. திருப்பத்துார், காவேரிப்பட்டணம், சேலம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 1,000- ஆண் குழந்தைகளில் கடந்தாண்டு, 925 என்ற கணக்கிலிருந்து இந்த ஆண்டு, 987 ஆக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளால், குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்று கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை யாராவது கண்டறிவது தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை