உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பரிசு

மா மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பரிசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில், சிறந்த மா விவசாயிகள் மற்றும் மா மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., பிரகாசம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி (பர்கூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் வரவேற்றார். சிறந்து அரங்குகள் மற்றும் சிறந்த மா உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி டி.ஆர்.ஓ., பிரகாசம் பேசியது:கிருஷ்ணகிரியில் 24 நாட்கள் நடந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சியை 2 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்தனர். கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 22 வகையான மாங்கனிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாங்கனி மற்றும் மதிப்புகூட்டு மா பொருட்கள் காட்சிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மாங்கனி ரகங்கள், மா மதிப்பு கூட்டு பொருட்கள், மாங்கூழ், மா உணவு வகைகள் என ஏழு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் சிறந்த காட்சி மாங்கனியாக தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தங்காடிகுப்பத்தை சேர்ந்த பரந்தாமன் என்ற விவசாயி வைத்திருந்த 'மல்லிகா' ரக மாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.அரசுத்துறையின் சார்பில் சிறந்த அரங்கு அமைத்து அதிக அளவில் மக்களை கவர்ந்த தோட்டக்கலை துறை, கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகிய அரங்குக்கு சிறப்பு பரிசுகளும், வனத்துறைக்கு முதல் பரிசும், மீன்வளத்துறைக்கு இரண்டாம் பரிசும், கால்நடைத்துறைக்கு மூன்றாம் பரிசும், மகளிர் திட்ட அரங்கிற்கு ஆறுதல் பரிசும் வழங்கப்படுகிறது.இவ்வாறு பேசினார்.மாங்கனி மற்றும் மதிப்பு கூட்டு மா பொருட்கள் ஏழு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ரகங்களில் சிறந்த காட்சி பொருட்களுக்கு 59 முதல் பரிசும், 49 இரண்டாம் பரிசும், 38 மூன்றாம் பரிசும் சேர்த்த மொத்தம் 146 மா விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ