மேலும் செய்திகள்
கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
28-Nov-2024
கிரானைட் கடத்தியலாரி பறிமுதல்தொப்பூர், டிச. 22-தர்மபுரி மாவட்ட, கனிம வளத்துறை புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது. அதை துரத்திச் சென்று, சேலம் மாவட்டம், ஜோடுகுளி அருகே மடக்கி பிடித்து சோதனை செய்தார். அதில், கர்நாடக மாநிலத்திலிருந்து, தேனி மாவட்டத்திற்கு கிரானைட் கற்களை கடத்தியது தெரிந்தது. லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், கிரானைட் கற்களுடன் லாரியை தொப்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Nov-2024