அரசு திட்ட விழிப்புணர்வுவாகனங்கள் துவக்கி வைப்பு
அரசு திட்ட விழிப்புணர்வுவாகனங்கள் துவக்கி வைப்புகிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் துவங்கப்பட்டு, 10வது ஆண்டை கொண்டாடும் வகையில், சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை, கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் வேடியப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.