உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிஊத்தங்கரை,: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை ரவுண்டானாவில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பி.டி.ஓ., அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இதில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.உதவி கோட்டபொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பெரியார்செல்வம், கண்காணிப்பாளர் காத்தவராயன், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., மோகன் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ