மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 503 மனுக்கள் குவிந்தன
21-Jan-2025
மா.திறனாளி மாணவர்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கல்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 377 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் கண்பார்வையற்ற, 7 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு தலா, 10,395 ரூபாய் வீதம் மொத்தம், 72,765 ரூபாய் மதிப்பில் எழுத்தை பெரிதாக்கி தரும் கருவிகள் (உருபெருக்கி) மற்றும் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, 2 கால், கைகள் பாதித்த வெங்கட்டம்மா என்ற மாற்றுத்திறனாளிக்கு, 1.06 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
21-Jan-2025