சக்தி மாரியம்மன் கோவில்மண்டல பூஜை வழிபாடு
தர்மபுரி:தர்மபுரி அருகே, சக்தி மாரியம்மன் கோவில் மண்டல பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி அருகே, வெண்ணாம்பட்டியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து, நடந்த மண்டல பூஜையில் தினந்தோறும் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, சக்தி மாரியம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சக்தி மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கபட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.