பி.எம்.சி., டெக் கல்லுாரியில்சர்வதேச மகளிர் தின விழா
பி.எம்.சி., டெக் கல்லுாரியில்சர்வதேச மகளிர் தின விழாஓசூர்:ஓசூர் அருகே, கோனேரிப்பள்ளியில் இயங்கும் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை இன்ஜினியரிங் கல்லுாரியில், சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மலர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தலைவர் குமார் தலைமை வகித்தார். இயக்குனர் சுதாகரன், கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் பேசினர். கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சிந்து பேசுகையில், ''பெண்களுக்கு இலக்கும், விடாமுயற்சியும் அவசியம். மாணவியர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்கள் தங்கள் மொபைல்போனில் காவல் உதவி செயலியை வைத்திருக்க வேண்டும்,'' என்றார். மகளிர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, கணினி பயன்பாடுகள் துறை தலைவர் ஏஞ்சலின் ரோசி, பேராசிரியர்கள் சங்கீராணி, சந்தியா, ஸ்வேதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.