நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத வெண்புறா கலை இலக்கிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரத வெண்புறா இயக்க நிறுவனர் கதிர்வேலு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாது முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அரசு தமிழ் வளர்ச்சி மன்றம் ஏற்படுத்த வேண்டும். அஞ்செட்டி அருகே சேதமடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க வேண்டும். கடந்த, 2019 முதல், 2025 வரை விண்ணப்பத்து காத்திருக்கும் நலிந்த கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலிந்த கலைஞர்கள் ஓய்வூதியத்தை, 3,000 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி பேசினர்.தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். கிருஷ்ணகிரி மாவட்ட பாரத வெண்புறா கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு நாடக குழுக்கள், கலைப்பிரிவினர் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.