உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வினர் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வினர் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

கிருஷ்ணகிரியில் பா.ஜ.,வினர் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்கிருஷ்ணகிரி:காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கர்நாடகா மற்றும் கேரள மாநில தலைவர்களை தமிழ்நாட்டிற்கு வரவேற்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, பா.ஜ.,வினர் நேற்று கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி சோமார்பேட்டையில், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் கட்சியினர் கறுப்பு கொடி ஏந்தியும், தி.மு.க., அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், நாகரசம்பட்டியில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், பர்கூரில் முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாசம், மத்துாரில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் கறுப்பு கொடி, கண்டன பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்துார் அருகே ஏரிக்கரையிலுள்ள டாஸ்மாக் கடைகள் முன், முதல்வர் படத்துடன் ஸ்டிக்கரை கிட்டம்பட்டியை சேர்ந்த, பா.ஜ., மண்டல தலைவர் ராஜேஸ்வரி, 38 என்பவர் ஒட்டினார். இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் முருகன், செல்வம் புகார் படி, மத்துார் போலீசார் ராஜேஸ்வரி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* பா.ஜ., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ் மற்றும் நிர்வாகிகள் அவரவர் வீடுகள் முன், கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமையில், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டிலுள்ள கட்சி அலுவலகம் முன், கட்சி நிர்வாகிகள் பிரவீன்குமார், சீனிவாசன், மஞ்சுளா, மல்லேஷ் ரெட்டி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர், கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை